உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான “நெஞ்சுக்கு நீதி” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமனிதன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
unknown nodeஇதனையடுத்து, உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மாமனிதன் படத்தை முடித்த பிறகு உதயநிதி ஸ்டாலின் தடையற தாக்க என்ற ஹிட் படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
unknown nodeஅந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு ஸ்ரீ காந்த தேவா இசையமைக்கிறார். நிதி அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார். அத்துடன் படத்தின் மோஷன் போஸ்டருடன் தலைப்பையும் படக்குழு அறிவித்துள்ளது.
unknown nodeஅதன்படி, இந்த திரைப்படத்திற்கு “கலகத்தலைவன்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மோஷன் போஸ்டர் மிகவும் அருமையாக இருப்பதால், படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அந்த மோஷன் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown node