நடிகை திரிஷாவுக்கு கோல்டன் விஸா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்...!

ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்ற முதல் தமிழ் நடிகை த்ரிஷா.

ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்ற முதல் தமிழ் நடிகை த்ரிஷா.

அமீரகத்தை பொருத்தவரையில் அந்நாட்டு அரசாங்கம் தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், அறிவியலில் அதிகம் ஆர்வம் மற்றும் திறன் கொண்ட பிரகாசமான மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் தனிப்பட்ட மற்றும் சிறப்பான திறன் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் கூடிய கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்நிலையில் தமிழ் திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வரும் திரிஷா அவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசாவை கொடுத்து கௌரவித்துள்ளது. இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவை பெரும் முதல் தமிழ் நடிகை என்ற பெருமையையும் அவர் பெறுவதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக, நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ், மம்முட்டி மற்றும் மோகன் லால் ஆகியோர்க்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடிகை திரிஷாவுக்கு கோல்டன் விஸா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்...!