உதயநிதியின் “நெஞ்சுக்கு நீதி” படத்திற்கு யு/ஏ சான்றிதழ்.!

Default Image

இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”.போனிகபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலினும், கதாநாயகியாக தன்யா ரவி சந்திரன் நடித்துள்ளார்.

இந்த படத்தில் ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசன், மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஆர்டிகிள் 15 எனும் பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்.

இந்த படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். இந்த படம் வரும் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், “நெஞ்சுக்கு நீதி” படத்திற்கு  U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான போஸ்டர் ஒன்றை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டு படம் U/A சான்றிதழ் கொடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்