தளபதி 65 படத்தில் இரண்டு வில்லன்கள்.. இரண்டு கதாநாயகிகள்..?

It has been reported that Vijay will be paired with two heroines and two villains in thalapathy 65.

தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகளும், இரண்டு வில்லன்களும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில், அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஏப்ரல் அல்லது மார்ச் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது.

அதற்கு பிறகு படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் படக்குழுவினர் கொடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது இந்த தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகளும், இரண்டு வில்லன்களும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே மற்றும் கியரா அத்வானி விஜய்க்கு வில்லனாக நவாசுதீன் சித்திகி மற்றும் வித்யுத் ஜாம்வால் ஆகியர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாகவும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.