ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ் உள்ளிட்டோர் நடிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி ‘லால் சலாம்’ உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த திரைப்படத்தில் மொய்தீன் பாயாக சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
unknown nodeசமீபத்தில், இப்படத்தின் டீசர் வெளியான நிலையில், இன்று மாலை 5 மணிக்கு ட்ரைலர் வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளதால் ரசிகர்களை ஆரவாரத்துடன் காத்திருக்கிறார்கள். முன்னதாக, காரணம் கூறாமல் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்தது. அதன்படி, தற்பொழுது பிப்ரவரி 9-ஆம் தேதி வரும் வெள்ளக்கிளமை படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
