இயக்குனர் சிறுத்தை சிவாவின் வீட்டில் நிகழ்ந்த சோகம்.! திரையுலகினர் இரங்கல்.!

Famous director Siruthai Siva's father Jayakumar passed away suddenly yesterday. His funeral will be held in Chennai today.

பிரபல இயக்குனரான சிறுத்தை சிவாவின் தந்தை ஜெயகுமார் நேற்றைய தினம் திடீரென காலமானார்.அவரது இறுதி சடங்குகள் இன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி அதன் பின் கார்த்தியை வைத்து சிறுத்தை எனும் படத்தை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ‘சிறுத்தை சிவா”. அதனையடுத்து தொடர்ந்து அஜித்துடன் இணைந்து பல ஹிட்களை கொடுத்தார் . அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான வீரம் , வேதாளம் மற்றும் விவேகம் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.தற்போது சிறுத்தை சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் மீண்டும் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.தற்போது இவரது வீட்டில் சோக நிகழ்வு ஒன்று நிகழ்ந்துள்ளது . சிறுத்தை சிவாவின் தந்தை ஜெயகுமார் நேற்றைய தினம் திடீரென சென்னையில் வைத்து காலமாகியுள்ளார் . பிரபல தயாரிப்பாளர் ஏ.கே.வேலன் அவர்களின் மகனும் , மலையாள சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக விளங்கும் பாலாவின் தந்தையுமான ஜெயக்குமார் ஒரு டாக்குமெண்டரி போட்டோகிராபர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாவின் தந்தையின் இறுதி சடங்குகள் சென்னையில் வைத்து இன்று நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது . வாழ்க்கைக்கு ஆறுதலாகவும் , வளர்ச்சிக்கு ஏணிப்படியாகவும் திகழ்ந்த சிவாவின் தந்தையின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.