ஒன்றாக இணைந்து மனிதகுலத்தின் பலத்தை காட்ட வேண்டும் – அனுஷ்கா ஷெட்டி.!

Actress Anushka Shetty has given advice to face Corona on her Instagram page

நடிகை அனுஷ்கா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனாவை எதிர்கொள்ள அறிவுரையை கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிப்பக்கப்பட்டு வருகின்றார்கள். மேலும் பல சினிமா பிரபலங்கள் , கிரிக்கெட் வீரர்கள் தங்களால் முடிந்த உதவியை இந்தியாவின் மருத்துவ உதவிக்கு கொடுத்து வருகிறார்கள். மேலும் சிலர் அறிவுரை  கூறிவருகின்றார்கள்.

அந்த வகையில், நடிகை அனுஷ்கா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அறிவுரையை  கூறிஉள்ளார் இதில் ” இந்த காலகட்டம் மிகவும் மோசமாக  உள்ளது. தங்களால் முடிந்த  சிறப்பான உதவிகளைச் அனைவரும் செய்ய முயல்கின்றனர். ஈடுசெய்ய முடியாத இழப்புகளைச் சந்திக்கின்றனர். இந்தக் கடினமான சூழலிலிருந்து மீண்டு வர நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்போம். தயவுசெய்து விதிமுறைகளைப் பின்பற்றுங்கள். வீட்டிலேயே இருங்கள் சுய ஊரடங்கைக் கடைப்பிடியுங்கள். மூச்சுப் பயிற்சி செய்யுங்கள் .

உங்களால் முடிந்தது ஒரு பிரார்த்தனையாக இருந்தாலும் அதைச் செய்து உதவுங்கள். நாம் இதைக் கடந்து வருவோம். எந்த நிலையிலும் சோர்ந்து விடாதீர்கள். எதிர்மறை எண்ணங்களை வர விடாதீர்கள். நாம் ஒன்றாக இணைந்து மனிதகுலத்தின் பலத்தை காட்ட வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

unknown node
ஒன்றாக இணைந்து மனிதகுலத்தின் பலத்தை காட்ட வேண்டும் – அனுஷ்கா ஷெட்டி.!