திருமணத்திற்கான நேரம் இன்னும் வரவில்லை : நடிகை டாப்ஸி

Default Image

நடிகை டாப்ஸி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இவர் ஒரு பேட்டியின் போது, தனது திருமணம் குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், தனக்கு சினிமாவில் நிரூபிக்க சரியான வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும், திருமணத்திற்கான நேரம் இன்னும் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், திருமணம் குறித்து யோசிக்க நேரமில்லை என்றும், அதே நேரம் உரிய நேரம் வரும்போது, தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்