எனது இசைக்கு நடனமாடும் கிகி..! சாந்தனு வெளியிட்ட டிக்டாக் வீடியோ..!

Dancing to my Tunes ???? Statutory warning⚠️ : *Happens only in TikTok* ???????????? @TikTok_IN @kikivijay11

கொரோனா வைரஸ் காரணமாக  மே 3 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது என்றும் ஆணை விடுத்துள்ளது. எனவே பல பிரபலங்கள் விழிப்புணர்வு வீடியோவையும், ஜாலியான வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.பாக்கியராஜ் அவர்களின் மகனான சாந்தனு அவர்களை நாம் பல கதாபாத்திரத்தில் பார்த்திருக்கிறோம். தற்போது கூட விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இவர் ஊரடங்கை முன்னிட்டு தனது மனைவி கிகியுடனும் , குடும்பத்துடனும் இணைந்து டிக்டாக் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார். இந்தநிலையில் தற்போது கிகி சாந்தனு சொல்லிக் கொடுத்து ஆடுவதை போன்று ஒரு டிக்டாக் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனுடன் எனது இசைக்கு நடனமாடுவது என்றும், இது டிக்டாக்கில் மட்டுமே நிகழ்கிறது என்றும் பதிவிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

 
View this post on Instagram

 

Dancing to my Tunes ???? Statutory warning⚠️ : *Happens only in TikTok* ???????????? @TikTok_IN @kikivijay11

A post shared by Shanthnu Bhagyaraj (@shanthnu) on