'லால் சலாம்' படத்தின் மூன்று நாள் வசூல் விவரம்.!

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால்,செந்தில், நிரோஷா, தம்பி ராமையா, கபில்தேவ், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் பிப்ரவரி

Lal SalaamTrailer

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால்,செந்தில், நிரோஷா, தம்பி ராமையா, கபில்தேவ், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் லால் சலாம்.

இந்த திரைப்படத்தில் மொய்தீன் பாய்  என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு கிரிக்கெட் படமாக உருவான இதற்கு கலவையான விமர்சனம் கிடைத்து வருவதால் வசூலில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், இந்த திரைப்படத்திற்கு இந்த அளவிற்கு ஒரு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ள காரணமே ரஜினிகாந்த் என்றே கூறலாம்.

மீண்டும் சினிமாவுக்கு வரும் சமந்தா.! முதல் படம் என்ன தெரியுமா?

லால் சலாம் திரைப்படத்தின் மூன்றாம் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

படத்தில் ரஜினிகாந்த் நீட்டிக்கப்பட்ட கேமியோவில் நடித்திருந்தாலும், படத்தின் முதல் நாள் வசூலான ரூ.3.55 கோடி கிடைத்தது. இரண்டாம் நாளாக ரூ.3.25 கொடியும் மூன்றாம் நாளான நேற்று ரூ.3.00 கோடி என மொத்தம் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. கண்டிப்பாக வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னுமே அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

'லால் சலாம்' படத்தின் மூன்று நாள் வசூல் விவரம்.!