மீண்டும் முன்னணி ஹீரோவை வில்லனாக்க துடிக்கும் தளபதி விஜய் படக்குழு.! இந்த முறை இவரா.?!

தளபதி 66 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் நானி நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.

தளபதி 66 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் நானி நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான அரபிக்குத்து ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்தது வருகிறது.

unknown node

இந்நிலையில், பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கும் நடிகர் குறித்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

unknown node

அதன் படி, தளபதி 66 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரபல நடிகரான நானியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும், சமீப காலமாக விஜய் நடிக்கும் படங்களில் சில முன்னணி நடிகர்கள் வில்லனாக நடித்து வருகிறார்கள். குறிப்பாக மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.