இந்த சூர்யா யாருக்கும் வணங்காதவன்..! வணங்கான் முதல் போஸ்டரே இணையத்தை அதிரவைக்குது...

இயக்குனர் பாலா – நடிகர் சூர்யா கூட்டணியில் வெளியான படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர்களது கூட்டணியில் வெளியான நந்தா, பிதா மகன் ஆகிய படங்கள்

இயக்குனர் பாலா – நடிகர் சூர்யா கூட்டணியில் வெளியான படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர்களது கூட்டணியில் வெளியான நந்தா, பிதா மகன் ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 16-ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் “சூர்யா 41” படத்தில் இணைந்துள்ளார்கள்.

unknown node

இந்த படத்தை 2டி நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். படத்தில் ஜோதிகா, கீர்த்தி ஷெட்டி, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிப்பு கோவாவில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

unknown node

இந்த நிலையில், இன்று இயக்குனர் பாலா தனது 56-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, சூர்யா 41 படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என 2 டி நிறுவனம் ட்வீட்டர் பக்கத்தில் காலையில் அறிவித்திருந்தது.

unknown node

அந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படத்திற்கு தலைப்பு “வணங்கான் ” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் முதல் லுக் போஸ்டரும் வெளியிடபட்டுள்ளது. போஸ்டரில் சூர்யா மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார்.

unknown node