பொன்னியின் செல்வன் படத்தில் விஜய்க்கு பிடித்த விஷயம் இது தான்… ரகசியத்தை போட்டுடத்தை சரத்குமார்.!

Default Image

தமிழ் திரையுலகமே ஒட்டுமொத்தமாக பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளது என்றே கூறலாம். மணிரத்தனம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

ponniyin selvan

படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், டிக்கெட்கான முன்பதிவு பல இடங்களில் முடிந்துவிட்டது.

இதையும் படியுங்களேன்- அரைகுறை ஆடையில் வீடியோ வெளியிட்ட தர்ஷா குப்தா…. “உம்மா” கொடுக்கும் ரசிகர்கள்..!

ponniyin selvan vijay

மக்களை போல பல சினிமா பிரபலங்களும் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். மேலும் சிலரும் டிரைலர், பாடல்களை கேட்டுவிட்டு புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். இந்த நிலையில், நடிகர் விஜய் பொன்னியின் செல்வன் படத்தின் பாடலை தான் எப்போதும் முணுமுணுத்துக்கொண்டே  இருக்கிறாராம்.

sarath kumar vijay

இதனை பொன்னியின் செல்வன் படத்திழும், விஜய் நடித்து வரும் வாரிசு படத்திலும் நடித்து வரும் சரத்குமார் சமீபத்திய ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” விஜய்க்கு பொன்னி நதி பாடல் ரொம்ப பிடித்துவிட்டது. எப்போதும் அந்த பாடலை தான் முணுமுணுத்துக்கொண்டே இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் எற்கனவே வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்