விஜயை நினைத்தவுடன் இந்த வார்த்தை தான் எனக்கு நினைவுக்கு வருகிறது – மாளவிகா மோகனன்

My favorite word in Malayalam is courage. "When I think of actor Vijay, I always remember that word," Malavika said.

மலையாளத்தில் எனக்கு பிடித்த வார்த்தை தைரியம்.  நடிகர் விஜயை பற்றி நினைத்தால் அந்த வார்த்தை தான் எனக்கு என்றும் நினைவுக்கு வருகிறது என மாளவிகா தெரிவித்துள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இந்நிலையில்,  இப்படம் திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில், பட வெளியீடு பலமுறை ஒத்தி வைக்கப்பட்ட வெறுப்பை நீங்கள் எப்படி சமாளித்தீர்கள்?  என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அவர், விஜய் அவர்களை போல ஒருவர் குழுவில் இருப்பது நல்ல விஷயம் என்று நான் நினைக்கிறேன். மலையாளத்தில் எனக்கு பிடித்த வார்த்தை தைரியம். அவரைப் பற்றி நினைத்தால் அந்த வார்த்தை தான் எனக்கு என்றும் நினைவுக்கு வருகிறது. படப்பிடிப்பு முழுவதும் நேர்மறையாக இருந்ததை தாண்டி ஊரடங்கு காலத்திலும் எங்களை உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தார் என்று தெரிவித்துள்ளார்.

விஜயை நினைத்தவுடன் இந்த வார்த்தை தான் எனக்கு நினைவுக்கு வருகிறது – மாளவிகா மோகனன்