சியான் 60 படத்திலிருந்து ராக்ஸ்டார் விலகிய காரணம் இதுதான்..!

The reason for Anirudh's departure from the Sion 60 film is now available

சியான் 60 படத்திலிருந்து அனிருத் விலகிய காரணம் தற்போது கிடைத்துள்ளது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் சியான் 60. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஷெரேயாஸ் கிருஷ்ணா பணியாற்றவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கப்பட்டதாகவும் படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதாகவும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால் முதன் முதலாக இந்த படத்தில் அனிருத் இசையமைப்பதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்கள் திடீரென நேற்று படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதாக அறிவித்ததால் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் அனிருத் இந்த படத்திலிருந்து விலகியதற்கான காரணம் தற்போது கிடைத்துள்ளது. ஆம், இசையமைப்பாளர் அனிருத் பல திரைப்படங்கள் கைவசம் வைத்துள்ள காரணத்தால் இந்த படத்திற்கு இசையமைக்க முடியவில்லையாம், இதனால் படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.