இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராசிகண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள். பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா, உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
unknown nodeசன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அனிருத் – தனுஷ் கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் பாடல்கள் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது.
unknown nodeஇதனையடுத்து, நேற்று திருச்சிற்றம்பலம் படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், நாளை படத்தில் தனுஷ் நடிக்கும் கதாபாத்திரத்திற்கான பெயர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#Thiruchitrambalam ???? Character Introductions From Tomorrow@dhanushkraja @anirudhofficial @MithranRJawahar @prakashraaj #Bharathiraja @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar @omdop @editor_prasanna @jacki_art @theSreyas @kavya_sriram @kabilanchelliah pic.twitter.com/WtPapUBPYq
— Sun Pictures (@sunpictures) June 7, 2022
அதற்கான போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரில், நடிகர் தனுஷ் இசைஞானி இளையராஜாவை பார்ப்பது போல் காமிக்கப்பட்டுள்ளது. எதற்காக இளையராஜா இந்த போஸ்டரில் இருக்கிறார் என்பது குறித்த விவரம் நாளை வெளியகும் என தெரிகிறது. மேலும் தனுஷ் இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.