வலிமை திரைப்படத்தின் ஹைலைட் இதுதானாம்...!!

The highlight of the film is said to be the thrilling bike chasing scenes of the movie

வலிமை திரைப்படத்தின் மிரளவைக்கும் பைக் சேஸிங் காட்சிகள்தான் படத்தின் ஹைலைட் என்று கூறப்படுகிறது.

இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை . இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வலிமை திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்திருந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால் வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஒத்திவைப்பதாக நேற்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது வலிமை திரைப்படத்தின் மிரளவைக்கும் பைக் சேஸிங் காட்சிகள்தான் படத்தின் ஹைலைட்டாம். அதனால் அதைவைத்து ட்ரெய்லர் உருவாக்கப்பட, ‘இந்த சஸ்பென்ஸை உடைக்க வேண்டாம்’ எனச் சொல்லி அதை ட்ரெய்லரிலிருந்து தூக்கச் சொல்லிவிட்டாராம் அஜித். அதனால் மறுபடியும் வேறு மாதிரி ட்ரெய்லர், டீஸரை ரெடி செய்துவருகிறார்ளாம். விரைவில் படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.