தளபதி விஜய் – இயக்குனர் அட்லீ கூட்டணியில் உருவாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் தெறி. இந்த படத்தில் விஜய் பொலிஸாகவும், மீனா மகள் நைனிகா விஜய் மகளாகவும், சமந்தா, எமி ஜாக்சன் என இரு ஹீரோயின்கள், ராதிகா, மொட்ட ராஜேந்திரன் என பலர் இப்படத்தில் நடித்து இருந்தனர். இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.
unknown nodeஇப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் மாஸ் மஹாராஜா ரவி தேஜா ஹீரோவாக நடிக்கிறார். சமந்தா வேடத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்க உள்ளார். வில்லனாக மிரட்டிய இயக்குனர் மகேந்திரன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்க உள்ளராம். இவர் ஏற்கனவே அங்கு ராஜமௌலி இயக்கத்தில் RRR, அல்லு அர்ஜுனின் புதிய படமென வில்லனாக டோலிவுட் ஹீரோக்களை மிரட்டி வருகிறார்.