சண்டைக்காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது....AK 61 படத்தில் இணையும் அதிரடி ஸ்டண்ட் இயக்குனர்.?

வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அடுத்ததாக ஹெச்,வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் தயாரிப்பாளர்

வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அடுத்ததாக ஹெச்,வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.

unknown node

நேர்கொண்ட பார்வை,வலிமை, ஆகிய படங்களை தொடர்ந்து அஜித் -ஹெச் வினோத் -போனிகபூர் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் இது. படத்திற்கு தாற்காலிகமாக “AK61” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் 2-வது வாரம் பூஜையுடன் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.

unknown node

இந்நிலையில், இப்படத்தில் அதிரடி ஸ்டண்ட் இயக்குனரும் நடன இயக்குனருமான சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்ற இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

unknown node

இதற்கு முன்பு இவர் ஐயப்பனும் கோஷியும், அதோ அந்த பறவை போல ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் இந்த படத்தில் இணைந்துள்ளதால் சண்டைக்காட்சி உண்மையாக நடப்பது போல் காமிக்கபடும் என தெரிகிறது.

unknown node

இந்த படம் மணி ஹெய்ஸ்ட் சாயலில் உருவாகவுள்ளதால் படத்திற்காக நடிகர் அஜித்குமார் 25கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். விரைவில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.