ஆஸ்கார் விருதெல்லாம் பெரிய விருது கிடையாது : நடிகை சுகாசினி

நடிகை சுகாசினி தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரும், நடிகையாவார். இவர் நடிகர் சாருஹாசனின் மகளாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில்

நடிகை சுகாசினி தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரும், நடிகையாவார். இவர் நடிகர் சாருஹாசனின் மகளாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவி ஆவார்.

இந்நிலையில், இவர் சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ஆஸ்கார் விருது எல்லாம் பெரிய விருது கிடையாது. அதை விட மேலான விருதுகளை எதிர்பார்க்க வேண்டும் என்றும், முன்பெல்லாம் மசாலா படத்திற்கு தான் ஆஸ்கார் விருது கொடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.