சிவகார்த்திகேயனை கண்டுகொள்ளாத லோகேஷ்! தலைவர் 171 படத்தில் எடுத்த முடிவு?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தலைவர் 171 படத்திற்கான பணிகளை தொடங்கி அதன் வேளைகளில் பிசியாக இருக்கிறார். விரைவில் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தன்னுடைய 171-வது திரைப்படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தினை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது.
படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் லியோ படத்தினை இயக்கி கொண்டிருந்த சமயத்திலே இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்டது. இன்னும் படத்திற்கான படப்பிடிப்பு கூட தொடங்காத நிலையில், படத்தில் நடிக்கும் பிரபலங்கள் பற்றிய தகவல் அடிக்கடி வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது.
நடிகை நக்மா வா இது? லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட தலைவர் 171 படத்தில் சிவகார்த்திகேயன் வில்லனாக நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியானது. அதனை போலவே ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவியது. ஆனால், சில காரணங்களால் லாரன்ஸ் வேண்டாம் என்று படக்குழு முடிவு செய்து இருப்பதாகவும் அடுத்ததாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், அதனை தொடர்ந்து தற்போது கிடைத்திருக்கும் தகவல் என்னவென்றால், இந்த தலைவர் 171-திரைப்படத்தில் வில்லனாக நடிக்க லாரன்ஸ் தான் உறுதி செய்யப்பட்டுள்ளாராம். முதலில் சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இயக்குனர் தரப்பில் இருந்து பெரிதாக சிவகார்த்திகேயனிடம் பேசவில்லையாம்.
எனவே, இறுதியாக படத்தில் ராகவா லாரன்ஸ் நடித்தாலே நன்றாக இருக்கும் என லோகேஷ் கனகராஜ் முடிவு செய்து தற்போது அவரிடம் பேச்சுவார்த்தையும் நடத்தி அது முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.