வீட்டிற்கு வரப்போகும் பொக்கிஷம்….மகிழ்ச்சி செய்தியை அறிவித்த அட்லீ.!

Default Image

இயக்குனர் அட்லீ கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகை பிரியா என்பவரை காதலித்து  திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 8 ஆண்டுகள் கடந்த நிலையில், பிரியா கர்ப்பமாக இருப்பதாக இயக்குனர் அட்லீ தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அறிவித்துள்ளார்.

தனது மனைவியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியீட்டு ” கர்ப்பமாக இருக்கிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அனைவரின் ஆசியும் அன்பும் வேண்டும்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ராஜா ராணி , தெறி, மெர்சல், பிகில் போன்ற தரமான வெற்றி படங்களை கொடுத்த அட்லீ அடுத்ததாக ஷாருக்கானை வைத்து ஜவான் எனும் பாண் இந்திய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்