கடந்த 2018-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் மாரி 2. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில், பலத்த வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்தது.
unknown nodeஇதில், குறிப்பாக ரௌடி பேபி என்ற பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். பாடலின் வரிகள் மற்றும் தனுஷ், சாய் பல்லவி நடனம், யுவன் இசை என அனைத்தும் பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது.
unknown nodeதமிழ் சினிமாவில், 1 பில்லியன் அதாவது 1000 மில்லியனிற்கும் மேல் பார்வையாளர்களை பெற்ற முதல் பாடல் என்ற சாதனையும் படைத்தது. இதுவரை றிருந்தது. இந்த பாடல் தனுஷின் “Wunderbar Films” யூடியூப் சேனலில் வெளியானது.
unknown nodeஇந்த நிலையில், தற்போது அந்த பாடல் யூடியூப்பில் இருந்து நீக்கபட்டுள்ளது. ஆம், தனுஷின் “Wunderbar Films” சேனலை மர்ம நபர்கள் ஹேக் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
unknown nodeரௌடி பேபி பாடல் மட்டுமின்றி அந்த சேனலில் வெளியான அணைத்து பாடல்கள், டீசர்கள், டிரைலர்கள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். விரைவில் இந்த சேனலை மீட்பர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.