மீண்டும் இரண்டு தரமான இயக்குனர்களிடம் கதை கேட்ட சூப்பர் ஸ்டார்..!

It has been reported that actor Rajini Annatta will finish the film and next act in two more films

நடிகர் ரஜினி அண்ணாத்த திரைப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக இதனைதொடர்ந்து இரண்டு திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். திரைப்படத்திற்கான படபிடிப்பு 60% படமாக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டப் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் எந்த இயக்குனருடன் இனைய போகிறார் என்ற தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது அந்த வகையில் தற்பொழுது அண்ணாத்த திரைப்படத்தை முடித்த பிறகு நடிகர் ரஜினிகாந்த் 2 புதிய திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது ரஜினியை வைத்து ஏற்கனவே இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி தனது 169 திரைப்படத்தில் ரஜினி நடிக்க உள்ளதாகவும், அதைப்போல் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமியை அழைத்து ரஜினி பாராட்டிவிட்டு தனக்கு கதை தயார் செய்யும்படி கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ரஜினி அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து எந்த இயக்குனருடன் கைகோர்க்கும் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.