விரைவில் தெரிந்துவிடும் சந்திரமுகி பாம்பு ரகசியம்.! படக்குழு வெளியிட்ட சூப்பரான தகவல்.!

ரஜினி நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பி.வாசு இயக்கத்தில் வெளியான "சந்திரமுகி 1" திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பி.வாசு தற்போது இரண்டாவது

ரஜினி நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பி.வாசு இயக்கத்தில் வெளியான “சந்திரமுகி 1” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பி.வாசு தற்போது இரண்டாவது பாகத்தை இயக்கி வருகிறார். இதில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

unknown node

சந்திரமுகி 2 திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது மைசூரில் முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்களேன்-சொக்க வைக்கும் அழகில் பிந்து மாதவி…வைரலாகும் அட்டகாசமான புகைப்படங்கள்.!

unknown node

சந்திரமுகியின் முதல் பாகத்தில் வேட்டையை ராஜா அரண்மனையில் ஒரு பெரிய பாம்பு அனைவர்க்கும் பயம் தரும் வகையில் இருக்கும்.  அந்த பாம்பு எப்படி அரண்மனைக்கு வந்தது என்று யாருக்குமே தெரியாது. அதனை, படத்தில் சொல்லவும் இல்லை.

unknown node

இந்த நிலையில் ‘சந்திரமுகி’ பங்களாவுக்குள் அந்த பாம்பு எப்படி வந்தது? படத்தின் கிளைமாக்ஸில் அந்த பாம்பு எங்கே சென்றது? என்பதற்கான பதிலை ‘சந்திரமுகி 2’ படத்தில் சொல்ல உள்ளதாக பி.வாசு தெரிவித்துள்ளார். இதனால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.