‘லால் சலாம்’ ஓடிடி ரிலீஸ் எப்போது? தேதி பின்னர் அறிவிக்கப்படும்.!
சென்னை : ‘லால் சலாம்’ திரைப்படம் எப்போது ஓடிடியில் ரிலீஸாகும் என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘லால் சலாம்’. இப்படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாயாக நீடிக்கப்பட்ட கேமியா ரோலில் நடித்திருப்பார். மேலும், இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் தம்பி ராமையா ஆகியோரும் நடித்திருந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சரி, இந்த படம் வெளியான ஒரு மாதத்திற்குள் ஓடிடிக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கடந்தும் இன்னும் இந்த படம் ஓடிடிக்கு வரவில்லை.
என்னடா இது, கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘இந்தியன் 2’ படமே அட்டர் பிளாப் ஆகியும் ஓடிடியில் வெளியானது. அப்படி இருக்கையில், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கே இந்த நிலைமையா? என்று பார்த்தால், அவரது மகள் ஐஸ்வர்யா, இந்த படம் தொடர்பாக தனியார் சேனல் ஒன்றிக்கு முன்னதாக ஒரு அதிர்ச்சிகரமனா செய்தியை பகிர்ந்து கொண்டார்.
அதாவது, ” 20 நிமிடம் கொண்ட படத்தின் காட்சிகள் மிஸ் ஆகிவிட்டது என்கிற அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தினார். பொறுப்பின்மை காரணத்தால் தான் இப்படி நடந்தது என்று நான் சொல்ல வேண்டும். பத்து கேமரா செட்-அப் போடு, நாங்கள் ஒரு கிரிக்கெட் போட்டியை படமாக்கியிருந்தோம்.
ஆனால், அது தொடர்பான இருபது நிமிட காட்சிகளை நாங்கள் தொலைத்துவிட்டோம், இது எப்படி நடந்தது என்றே தெரியவிலை. என்ன செய்வது என்றும் எங்களுக்குத் தெரியவில்லை. இதனால், அந்த காட்சிகளை மீண்டும் படமாக்க வேண்டும் என்று படக்குழு முடிவு செய்தது. ஆனால், விஷ்ணு, செந்தில், அப்பா உட்பட அனைவருமே தங்கள் கெட்-அப்பை மாற்றிக்கொண்டது தான் இறுதியில் பிரச்சனையாக அமைந்தது.
இதன் காரணமாக எங்களால் அந்த காட்சிகளை மீண்டும் படமாக்க முடியவில்லை. கடைசியில், ஏற்கனவே எடுத்து இருந்ததை வைத்து படத்தை மீண்டும் எடிட் செய்தோம். இது எங்களுக்கு பெரிய சவாலாக இருந்தது. விஷ்ணுவும், அப்பாவும் அந்த காட்சிகளை மீண்டும் செய்யத் தயாராக இருந்தபோதிலும், எங்களால் அதை மீண்டும் படமாக்க முடியவில்லை” என்று கூறினார்.
இந்த ஒரு காரணத்தால், ‘லால் சலாம்’ ஓடிடி உரிமையை வாங்கிருந்த நெட்ப்ளிக்ஸ் நிறுவனம், தொலைந்து போன அந்த 20 நிமிட காட்சிகளை கொடுத்தால், படத்தை மேலும் விளமபரம் செய்து ஸ்ட்ரீமிங் செய்வதாக பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், படக்குழுவால் அது முடியாததால் இன்னும் ஓடிடியில் ரிலீஸாகாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு லால் சலாம் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 20ஆம் தேதி சன் நெக்ஸ்ட்டில் வெளியாகும் என ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால், அந்த போஸ்டர் ரசிகர்களால் எடிட் செய்யப்பட்ட போஸ்டர் என்றும், ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் படக்குழுவே அதிகாரப்பூர்வாமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.