உலகின் தொன்மையான மொழி தமிழ்! பிரபல இந்தி நடிகர் அதிரடி!

கடந்த சில நாட்களாக இந்தி திணிப்புக்கு எதிராக பல திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், பிரபல இந்தி நடிகரும்,

கடந்த சில நாட்களாக இந்தி திணிப்புக்கு எதிராக பல திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், பிரபல இந்தி நடிகரும், பாடகருமான ஆயுஷ்மான் குரானா தனது ட்வீட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது, இந்தி மொழியில் பெர்சியம் மற்றும் அரேபியா மொழியின் தாக்கம் இருப்பதை இந்தி தேசியம் பேசுபவர்கள் உணர வேண்டும். தூய்மையான மொழியை நீங்கள் பேச வேண்டுமென்றால், திராவிட மொழிகளை தான் பேச வேண்டும் என்றும், அவை தான் வேற்றுமொழி கலப்பில்லாதது என்றும் தெரிவித்துள்ளார்.மேலும், உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று தமிழ். இந்தியை போற்றுபவர்கள் இதனை எளிதாக உணர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

உலகின் தொன்மையான மொழி தமிழ்! பிரபல இந்தி நடிகர் அதிரடி!