கடந்த சில நாட்களாக இந்தி திணிப்புக்கு எதிராக பல திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், பிரபல இந்தி நடிகரும், பாடகருமான ஆயுஷ்மான் குரானா தனது ட்வீட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, இந்தி மொழியில் பெர்சியம் மற்றும் அரேபியா மொழியின் தாக்கம் இருப்பதை இந்தி தேசியம் பேசுபவர்கள் உணர வேண்டும். தூய்மையான மொழியை நீங்கள் பேச வேண்டுமென்றால், திராவிட மொழிகளை தான் பேச வேண்டும் என்றும், அவை தான் வேற்றுமொழி […]
இந்தி மொழி அல்லாத மாநிலங்களில் கட்டாயம் ஹிந்தி மொழியை படிக்க வேண்டும் என்று மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உட்பட நாடு முழுவதிலும் இருந்து சமூக வலைத்தளங்களில் ஹிந்தி எதிர்ப்பு பிரச்சாரம் நடக்கிறது. டுவீட்டரில் உலக அளவில் #stophindiimposition மற்றும் #tnagainsthindiimosition ஆகிய ஹேஸ்டேக்குகள் தொடர்ந்து முன்னிலையில் இருக்கின்றன. புதியக் கல்விக்கொள்கையின் படி ஹிந்தி மொழி அல்லாத மாநிலங்கள் ஹிந்தி மொழியையும் கற்க வேண்டும் என்று கஸ்துரி ரங்கன் கமிட்டியானது மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.இதன் […]