அடுத்த டார்கெட் 100 கோடி தான்! வசூலில் வெறியாட்டம் ஆடிய ராயன்!!

raayan movie

ராயன் : தனுஷின் 50-வது திரைப்படமான ராயன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக்க மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. வசூல் ரீதியாக மட்டும் படம் வெளியான இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 50 கோடி வரை வசூல் செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

அதனை தொடர்ந்து படம் வெளியான மூன்று நாட்களில் உலகம் முழுவதும் எவ்வளவு கோடி வசூல் செய்துள்ளது என்ற விவரம் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, ராயன் படம் வெளியான மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் படத்திற்கு வசூல் ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியான 3 நாட்களில் படம் 70 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருக்கும் நிலையில், படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் 100 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட் செலவு செய்து எடுக்கப்பட்டுள்ள இந்த ராயன் படம் இதுவரை 70 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் பட்ஜெட்டை தாண்டி தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. தனுஷின் 50-வது படமான இந்த படத்தினை அவரே இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் அவருடன் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன்,  சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்