இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது “வாரிசு” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான தமன் இசையமைத்து வருகிறார்.
unknown nodeஇன்று விஜயின் 48-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியீடபட்டது. அதனை தொடர்ந்து இன்று படத்தின் காலை படத்தின் இரண்டாம் லுக் போஸ்டரும் வெளியிடபட்டது.
unknown nodeஇதனையடுத்து, தற்போது படத்தின் மூன்றாம் லுக் போஸ்டரும் வெளியீடப்பட்டுள்ளது. போஸ்டரில் அட்வென்ச்சர் பைக்கில் கெத்தாக அமர்ந்து இருப்பது போல காட்டப்பட்டுள்ளது. படத்திலிருந்து வெளியான மூன்று போஸ்டர்களும் அருமையாக இருப்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
unknown nodeஇந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம், யோகிபாபு, ஜெயசுதா சங்கீதா என பல சினிமா பிரபலங்கள் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
unknown node