முதல் படத்திற்கு வாய்ப்பளித்த இயக்குனருடன் இணையும் இசை அசுரன்..!

It has been officially announced that GV Prakash will compose the music for the upcoming film directed by Vasantha Balan and starring Arjun Das.

இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகவுள்ள படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வசந்த பாலன் தற்போது  தனது பள்ளிக்கால நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த தயாரிப்பு நிறுவனம் ஒரு புதிய திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் அந்த படத்தை அவரே இயக்கவுள்ளதாகவும், படத்தில் நடிகராக கைதி, மாஸ்டர், அந்தகாரம் போன்ற படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளார் என்றும் அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை துஷாரா விஜயன் நடிக்கவுள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியானது.

இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் இசையமைப்பாளராக இசை அசுரன் என்று அழைக்கப்படும் ஜிவி பிரகாஷ் இசையமைப்பார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜிவி முதன் முதலாக இசையமைத்த திரைப்படம் வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த வெயில் படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node