சிம்பு நீண்ட நாட்களாக ஆசை வைத்திருந்த காரை அவரது தாயார் உஷா ராஜேந்தர் பரிசளித்து சிம்புவின் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
நடிகர் சிம்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்” படத்தில் நடித்து முடித்து விட்டு , வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் புதுச்சேரியில் நடந்து வந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொண்டார்.வழக்கமாக படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் அலட்சியம் செய்யும் சிம்பு தற்போது சரியாக அனைத்து படப்பிடிப்புகளிலும் கலந்து கொண்டு வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தற்போது சிம்புவின் தாயார் அவரது மகனுக்கு கார் ஒன்றை பரிசளித்துள்ளார் . நீண்ட நாட்களாக அந்த காரின் மீது சிம்பு ஆசை வைத்திருந்ததாகவும் ,அதனை சிம்புவின் தாயாரான உஷா ராஜேந்தர் நிறைவேற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.தற்போது தாயார் பரிசளித்த பச்சை நிறத்திலான மினி கூப்பர் காரில் சிம்பு சுற்றி வருவதாக கூறப்படுகிறது.
unknown node