சூர்யாவின் வாடிவாசலுக்காக வலிமை பாணியை கையில் எடுத்த கலைப்புலி.!

சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி அணைத்து சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் "வாடிவாசல்". ஜல்லிக்கட்டு கதையை மையமாக வைத்து இந்த

சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி அணைத்து சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் “வாடிவாசல்”. ஜல்லிக்கட்டு கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குவதால் படத்தின் மீது மிகவும் எதிர்பார்ப்பு உள்ளது.

unknown node

இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜூலை மாதம் முதல் தொடங்கப்படவுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு செட் அமைத்து படத்தின் டெஸ்ட் ஷுட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

unknown node

இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படம் தயாரிக்க அதிக பட்ஜெட் தேவைப்படுவதால் கலைப்புலி தாணு தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

unknown node

அது என்னவென்றால், கலைப்புலி தாணு வாடிவாசல் திரைப்படத்தை ஜீ ஸ்டூடியோ நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளாராம்.இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ் தயாரிப்பதன் மூலம் வாடிவாசல் திரைப்படத்திற்கான தொலைக்காட்சி உரிமம் மற்றும் ஓடிடி உரிமம் ஆகியவற்றை ஜீ நிறுவனமே பெற்றுக் கொள்ளும் என கூறப்படுகிறது.

unknown node

இதற்கு முன்பு அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தை போனிகபூர் ஜீ ஸ்டூடியோஸ் உடன் இணைந்து தயாரித்து இருந்தார். இதனை தொடர்ந்து கலைப்புலி தாணுவும் அதே பாணியை கையில் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.