தமிழை தாண்டி நடிகர் தனுஷ் ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது நடிப்பில் ஹாலிவுட்டில் வெளியான “தி க்ரே மேன்” படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தை அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் இயக்கி இருந்தார்கள்.
unknown nodeஇப்படத்தில் தனுஷுடன் கிரிஸ் எவான்ஸ், ரியான் காஸ்லின், அன்னா டி அர்மாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் இயக்குனர்கள் ரூஸோ சகோதரர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
unknown nodeஇதையும் படியுங்களேன்-கல்யாணத்துக்கு சம்மதம்.. விரைவில் கீர்த்திக்கு டும்..டும்..டும்.! மாப்பிள்ளை யார் தெரியுமா.?
தி க்ரே மேன் 2 மார்க் கிரீனி எழுதிய நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ள இந்த அறிவிப்பை தொடர்ந்து இரண்டாவது பாகத்தில் தனுஷ் நடிப்பாரா..? இல்லையா..? என்கிற கேள்வி ரசிகர்களுக்கு மத்தியில் கேள்வியாக எழும்பியது.
unknown nodeஇதனையடுத்து, தற்போது நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தி க்ரே மேன் 2 படத்தில் தான் நடிப்பதை உறுதிபடுத்தியுள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர்.
unknown node