வெறித்தனமாக வெளிவந்த "வாடிவாசல்" பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா, ஜூலை 23ம் தேதியான இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.தற்போது பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பல பிரபலங்கள் இணைந்து காமன் டிபியை வெளியிட்டு டிரெண்டிங்கில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள சூரரை போற்று படத்தின் படக்குழுவினர் இணைந்து பர்த்டே ஸ்பெஷலாக தமிழில் ‘காட்டுப்பயலே’ என்ற பாடலின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று சூர்யாவின் பிறந்த நாளிற்கு அடுத்த அப்டேட்டாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது, இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அந்த போஸ்டரில் மிகவும் மஸான கெட்டப்பில் சூர்யா உள்ளார்.

unknown node