முதன் முதலில் இங்கு தான் என்.ஜி.கே. படத்தின் டிக்கெட் விற்பனை! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

The first thing here is NGK. Ticket sales of the film! Fans of happiness

நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் “காப்பான் “இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இவர் நடிப்பில் மே 31-ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் என்.ஜி.கே. இந்த திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில்  எதிர்பார்ப்பு உள்ளது.

இப்படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார்.மேலும் இப்படம் அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜ இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கேரளாவில் சூர்யா ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.இந்நிலையில் என்.ஜி.கே. படத்திற்க்கான டிக்கெட் கேரளாவில் உள்ள கோழிக்கூடு பகுதிகளில் இப்போதே இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.