சூர்யாவின் 40 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
சூர்யாவின் நடிப்பில் வெளியாக இருக்கும் 40 ஆவது படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் தற்பொழுது ரஜினியின் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட், சூர்யாவின் 40 ஆவது படங்கள் உருவாகிறது.
இந்நிலையில் தற்போது சூர்யாவின் 40 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாவதாக சன் பிக்ச்சர்ஸ் வீடியோ டீசர் வழியாக அறிவித்தது.
unknown nodeஇதனை தொடர்ந்து இன்று மீண்டும் சூர்யாவின் முதுகு காட்டிய புகைப்படத்தை வெளியிட்டு அதில் இன்று முதல் லுக் வெளியாவதை உறுதி செய்துள்ளனர். இதனால் சூர்யாவின் ரசிகர்கள் முதல் லுக்கிற்காக ஆவலாக காத்திருக்கின்றனர்.