தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் கடந்த 13-ஆம் தேதி வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார்.
unknown nodeஇந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடித்துள்ள நிலையில். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைத்து தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் எந்த இயக்குனருடன் இணைய போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் அதிகமாகவுள்ளது.
unknown nodeஇந்த நிலையில், விஜயை வைத்து சிவகாசி, திருப்பாச்சி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பேரரசு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய்யை வைத்து தான் படம் இயக்க தயாராக இருப்பதாகவும், விஜய் அழைத்தாள் பண்ணலாம் எனவும் கூறியுள்ளார்.
unknown nodeஇதுகுறித்து அவர் கூறியது” விஜய் சாருக்காக 3 கதைகள் ரெடி செய்து வைத்துளேன். நான் ரெடியாக இருக்கிறேன் என்று அவரிடம் சொல்லிவிட்டேன். விஜய் சார் சூழ்நிலை பார்த்துவிட்டு என்னை அழைப்பதற்காக காத்துள்ளேன். அவருக்கு இப்பொது இருக்கும் மார்க்கெட் வேற..பட்ஜெட் வேற அதையெல்லாம் அவர் பார்த்துவிட்டு எனக்கு பட வாய்ப்பு கொடுக்கலாமா வேணாமா என்று சந்தேகம் இருக்கும்.
unknown nodeஇதையெல்லாம் மீறி அவருக்கு ஓகே என்றால்.. என்னை அழைத்தாள் நான் ரெடி, அதற்கான சூப்பர் கதையோடு இருக்கிறேன். இது எல்லாம் விஜய் சாருடைய முடிவுல இருக்கு” என தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கதை நன்றாக இருந்தால் விஜய் நிச்சயம் ஒப்புக்கொள்வார்! வாழ்த்துக்கள் பேரரசு அவர்களே என தெரிவித்து வருகிறார்கள்.