கடந்த 2010-ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் “யாரடி நீ மோகினி”. இப்படதின் கதை, திரைக்கதையை செல்வராகவன் எழுத, மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கி இருந்தார். படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
unknown nodeஇந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று தனுஷிற்கு பெரிய வசூல் கொடுத்த படமாக திகழ்ந்தது.இந்த திரைப்படம் வெளியாகி 14 ஆண்டுகளை நிறைவு செய்தது. ரசிகர்கள் #14yearsofyaaradineemohini என்ற ஹஸ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.
unknown nodeஇதனடுத்து ஊடகத்திற்கு பேட்டியளித்த மித்ரன் ஆர்.ஜவஹர் பல சுவாரஸ்மான விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில் ” யாரடி நீ மோகினி படம் வெளியாகி 14 ஆண்டுகளை நிறைவுபெற்றுள்ளது மகிழ்ச்சி. இந்த படத்தை நியாபகம் வைத்துள்ளார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது, மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
unknown nodeமுதலில் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நயன்தாராவை தேர்வு செய்தோம். ஆனால், தனுஷ் சார் யோசிச்சார். அதற்கு பின் நாங்க உங்களுக்கு அவங்க பாஸ் கதாபாத்திரம் அதனால் சரியாக இருக்கும் என கூறினோம். அதன் பிறகு இருவரும் நடித்தார்கள். அவர்களது ஜோடி ரசிகர்களுக்கு பிடிக்கும் படியாக அமைந்தது.” என தெரிவித்துள்ளார்.


