பொன்னியின் செல்வன் 2 வசூலை முறியடிக்குமா ‘GOAT’? வசூல் விவரம் இதோ…

GOAT திரைப்படம் வெளியான 6 நாட்களில் உலகம் முழுவதும் 340 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

PS 2 VS GOAT

சென்னை : விஜயின் ‘GOAT’ படம் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்தது வருகிறது. வெளியான 5 நாட்களில் படம் உலகம் முழுவதும் 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து  தமிழ் சினிமாவில் அதிகமாக 300 கோடி வசூல் செய்த திரைப்படங்கள் விஜய் திரைப்படங்கள் என்ற சாதனையை படைத்தது கொடுத்தது.

அந்த சாதனையை தொடர்ந்து அடுத்ததாக பல படங்களின் வசூல் சாதனையையும் ‘GOAT’ முறியடித்துக்கொண்டும், முறியடிக்க காத்துக்கொண்டும் இருக்கிறது. அந்த வகையில், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான பொன்னியின் செல்வன் 2-வது பாகத்தின் மொத்த வசூல் சாதனையை ‘GOAT’ ஒரே வாரத்தில் முறியடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மொத்தமாக உலகம் முழுவதும் 345 கோடிகள் வரை வசூல் செய்திருந்தது. GOAT படம் வெளியான 6 நாட்களிலே உலகம் முழுவதும் 340 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இன்றயை வசூல் வைத்து கணித்து பார்த்தால் கண்டிப்பாக வெளியான 1 வாரத்தில் மொத்தமாக பொன்னியின் செல்வன் 2 வசூலை GOAT கடந்துவிடும் என கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் 2 வசூலை GOAT முறியடித்துவிட்டால் அடுத்ததாக விக்ரம் படத்தின் வசூலை தான் முறியடிக்கும். ஏனென்றால், விக்ரம் படம் உலகம் முழுவதும் 435 கோடிகள் வரை வசூல் செய்து தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த 5-வது தமிழ் திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. அந்த சாதனையை GOAT முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

அதே சமயம் விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான லியோ திரைப்படம் 600 கோடிகள் வரை வசூல் செய்து அதிகம் வசூல் செய்த தமிழ் படங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ரஜினியின் 2.0 (800), ஜெயிலர் (625) கோடி வசூல் செய்து முதல் இரண்டு இடங்களில்  உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்