முதல் நாளிலேயே பிக் பாஸ் போட்ட தருமாறு கண்டிஷன்…அதிர்ந்து போன போட்டியாளர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியா களைகட்ட தொடங்கிவிட்டது போல தெரிகிறது. ஆம்… முதல் நாளான இன்று இனிதே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பிக் பாஸ் முதல் வாரத்திற்கான டாஸ்க்கை வழங்கியுள்ளார்.
இன்று வெளியான முதல் ப்ரோமோவில், இந்த வாரத்திற்கான தலைவராக பதவிக்கு பொறுப்பேற்றுள்ள விஜய் வர்மா கைகாட்டிய 6 போட்டியாளர்கள் இரண்டாவது வீட்டில் அனுப்பி வைக்கப்பட்டுள்னர்.
தற்பொழுது, வெளியாகியுள்ள இரண்டாம் ப்ரோமோவில், இரண்டாம் வீட்டிற்கு சென்றுள்ள 6 போட்டியாளர்களுக்கு கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளார் பிக் பாஸ். அதாவது, இரண்டாம் வீட்டை ஸ்மால் பாஸ் என்றும் அனைவரும் என்ட்ரி கொடுத்த வீட்டை பிக் பாஸ் என்றும் அழைக்கின்றனர்.
இந்நிலையில், ஸ்மால் பாஸ் வீட்டிற்கு நுழைந்துள்ள 6 போட்டியாளர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள விதிகளை கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். விதிகளை பற்றி போட்டியாளர் சரவணன் வாசிக்கையில், ஸ்மால் பாஸ் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லவே கூடாது என்றும், பிக் பாஸில் கொடுக்கப்படும் எந்த டாஸ்க்கிலும்கலந்து கொள்ள முடியாது என்றும் கூறினார்.
முக்கியமாக, ஷாப்பிங் செய்ய முடியாது என்று கூறியதும் 6 போட்டியாளர்களின் முகமும் வாடி போனது. பின்னர், தொடர்ந்து விதிமுறை பற்றி வாசிக்கையில், மூன்று வேலைக்கான உணவை பிக் பாஸ் ஹவுஸ் மெட்ஸ் முடிவு செய்ய, அதை மட்டும் தான் சமைத்து சாப்பிட வேண்டும்.
மேலும், பிக் பாஸ் வீட்டை சுத்தம் செய்வதிலிருந்து பாத்ரூம் சுத்தம் செய்தவது வரை என இதனை ஸ்மால் பாஸ் வீட்டின் 6 போட்டியாளர்களே பார்த்து கொள்ள வேண்டும் என ஸ்டிட்டான கண்டிஷன்களை பிக் பாஸ் போட, அந்த ஸ்மால் பாஸ் வீட்டின் 6 போட்டியாளர்களும் அப்படியே ஆடி அதிர்ந்து போனார்கள்.
#Day1 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 7 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/zVtDuloG1O
— Vijay Television (@vijaytelevision) October 2, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!
February 25, 2025
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025