ஸ்ருதிகாசனுடன் லோகேஷ் கனகராஜ்? குழப்பத்திற்கு கிடைத்த முற்றுப்புள்ளி!

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் இருவரும் ஒருவரை ஒருவர்

shruti haasan

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டது போல புகைப்படம் ஒன்றை வெளியீட்டு இருந்தது.  அதில் `Inimel Delulu is the New Solulu’  என்ற தலைப்பும் இருந்தது.

இதனை பார்த்த பலரும் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இருவரும் இணைந்து ஒரு படம் நடிக்க போகிறார்கள் என்று பலரும் கூறி வந்தார்கள். மேலும் ஒரு சிலர் என்னவென்று புரியாமல் ஒரு அப்டேட் விட்டீர்கள் என்றால் அதனை தெளிவாக சொல்லுங்கள் என்று கூறிவந்தனர்.

மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த நிலையில், தற்போது அந்த அப்டேட்டுக்கான முழு விவரம் கிடைத்திருக்கிறது. அது என்னவென்றால், நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பது மட்டுமின்றி பாடல்களை பாடுவது என அதில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். எனவே, அவர் அடுத்ததாக ஒரு காதல் கலந்த ஆல்பம் பாடலை எழுதி இருக்கிறாராம்.

அது மட்டுமின்றி அந்த பாடலை அவரே எழுதியது மட்டுமின்றி இசையமைத்தும் கொடுத்து இருக்கிறாராம். அந்த ஆல்பம் பாடலில் தான் தற்போது ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் இணைந்து நடித்து இருக்கிறார்களாம். இந்த பாடலை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.