கன்னட டிவி சானலை சேர்ந்தவர் இளம் நடிகர்கிரண் ராஜ். அதே போல மும்பையை சேர்ந்தவர்மாடலிங் நடிகை யாஸ்மின் பதான். இவர் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு போலிசாரால் கிரண் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இவர் மீதுமும்பை போலிஸ் காவல் நிலையத்தில் கடந்த 29 ல்தன்னை அடித்து துன்புறுத்தியாக யாஸ்மின் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலிஸ் விசாரணை நடைபெற்றது.
இதில் இருவருக்கும் மும்பையில் ஷூட்டிங்கின் போது நண்பர்களாகி பின் இருவரும்லிவ் இன் டூகெதர்முறையில் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள். இந்நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ள யாஸ்மின் கூறியிருக்கிறார்.
இந்த விசயத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவியுள்ளது. அண்மையில் காரில் இருவரும் வெளியே சென்றுள்ளனர். அப்போதுகாருக்குள் வைத்து கிரண் யாஸ்மினை அடித்தாகசொல்லப்பட்டுள்ளது.