அதிக ரத்த அழுத்தம் காரணமாக நடிகர் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி.
தமிழ் சினிமாவில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான லத்திகா எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் நடிகர் சீனிவாசன். இவரின் நகைச்சுவை நடிப்பால் ரசிகர்கள் அவரை பவர் ஸ்டார் என்று அழைத்தனர்.
unknown nodeஇந்த படத்தை தொடர்ந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா,கேப்மாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது பல காமெடி கதாப்பாத்திரங்களிலும், ஹீரோவாகவும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
unknown nodeஇந்த நிலையில் இவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் பவர்ஸ்டார் சீனிவாசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பின் விறு விறுப்பாக நடைபெற்று வந்தது. அப்போது திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். அதன்பின். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
unknown nodeஅங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . அதிக ரத்த அழுத்தம் காரணமாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயக்கமடைந்து விழுந்து இருப்பதாக பரிசோதனைக்குப் பின்னர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் பவர் ஸ்டார் குணமடைய அவரது ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகிறார்கள்.