இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வடசென்னை. இந்த படத்தில் அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், பாலாஜி, சுப்பிரமணியம் சிவா, ராதாரவி, டேனியல் பாலாஜி, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
unknown nodeசிறந்த கேங்ஸ்டர் திரைப்படமாக உருவான இப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் எப்போது தான் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துள்ளனர்.
unknown nodeஆனால் தனுசும்,வெற்றிமாறனும் தற்போது பிசியாகவுள்ளதால் படம் எடுக்க இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா வடசென்னை 2 குறித்து பேசியுள்ளார்.
unknown nodeஇது குறித்து ஊடகத்திற்கு பேட்டியளித்த ஆண்ட்ரியா “வடசென்னை 2 எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை..நானும் தனுஷ் சாரும் வெற்றிமாறனிடம் வடசென்னை 2 குறித்து கேட்டால் அது பற்றி வாய் திறக்க மறுக்கிறார்..நானும் வடசென்னை 2 படத்திற்காக காத்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.