இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் தற்போது “ஜவான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும், தீபிகா படுகோனே முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள். மேலும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
unknown nodeரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்று வந்தது. அப்போது ரஜினி, விஜய் உள்ளிட்ட திரைபிரபலங்கள் ஷாருக்கானை சந்தித்து பேசியுள்ளனர்.
இதையும் படியுங்களேன்-இத செய்யாம விட்டுட்டாரே… மணிரத்னம் மீது மன வருத்தத்தில் பிரபல தயாரிப்பளார்.!
unknown nodeஇதனையடுத்து, முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிவடைந்த நிலையில், ஷாருக்கான் தனது ட்வீட்டர் பக்கத்தில் சுவாரஷியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் டிவிட்டரில் கூறியிருப்பது “இந்த 30 நாள் படக்குழுவினருடன் சிறப்பாக இருந்தது. தலைவர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து ஆசீர்வதித்தார்.
unknown nodeநயன்தாராவுடன் படம் பார்த்தது, அனிருத்துடன் பார்ட்டி செய்தது, விஜய் சேதுபதியுடன் மனம் விட்டு பேசியது மற்றும் தளபதி விஜய் தனக்கு சுவையான உணவை தந்தார். அட்லீ மற்றும் பிரியா உங்கள் விருந்தோம்பலுக்கு நன்றி. இப்போது சிக்கன் 65 செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
Wot a 30 days blast RCE team! Thalaivar blessed our sets…saw movie with Nayanthara partied with @anirudhofficial deep discussions with @VijaySethuOffl & Thalapathy @actorvijay fed me delicious food.Thx @Atlee_dir & Priya for ur hospitality now need to learn Chicken 65 recipe!
— Shah Rukh Khan (@iamsrk) October 7, 2022