51 வது கோவா சர்வதேச திரைப்பட விருது விழாவில் அசுரன் திரைப்படம் தேர்வாகியுள்ளதால் நடிகர் தனது தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கோவா சர்வதேச 51 வது திரைப்பட விருது விழா வருகின்ற ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், தற்போது இந்த பட்டியலில் இடம்பெற்ற படங்களை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்வீட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டார்.
அசுரன் தேர்வு
unknown nodeஇந்த பட்டியலில் 23 படங்கள் தேர்வாகியுள்ளது. அதில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் தற்போது நன்றி தெரிவிக்கும் வகையில் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் “கோவாவில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்கு அசுரன் தேர்வாகி இருப்பது படக்குழுவுக்கு கிடைத்த பெருமை மக்களின் திரைப்படமான அசுரனை தேர்வு செய்ததற்கு நன்றி என்று ட்வீட் செய்து தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
unknown node