மீண்டும் திரையரங்குகளில் தெறிக்க விட ரெடியாகும் தளபதியின் 'துப்பாக்கி'.!

It has been reported that Commander Vijay's film 'Gun' is to be re-released in theaters.

தளபதி விஜய்யின் துப்பாக்கி படத்தினை மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2012-ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் துப்பாக்கி.காஜல் அகர்வால், சத்யன், ஜெயராம், வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வசூல் அளவில் நல்ல வரவேற்பை பெற்றது.ராணுவ வீரரான கேப்டன் ஜெகதீஷாக கலக்கியிருந்தார் விஜய் .

இந்த நிலையில் தற்போது துப்பாக்கி படத்தினை மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆம் மார்ச் 19-ம் தேதி விஜய்யின் துப்பாக்கி படத்தினை மீண்டும் திரையரங்குகளில் ரீலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது தளபதி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.