சத்தமில்லாமல் நடந்து முடிந்த "தளபதி67" பூஜை.! ஏமாற்றத்தில் ரசிகர்கள்.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள "தளபதி 67 " படத்திற்கான பூஜை இன்று சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த பூஜையில்,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள “தளபதி 67 ” படத்திற்கான பூஜை இன்று சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த பூஜையில், விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ்  படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ்  நிறுவனம் சார்பில் தயாரிக்கும் லலித் குமார் மற்றும் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளார்களாம்.

unknown node

Thalapathy 67 [Image Source: Twitter ]

மேலும், படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ப்ரோமோவுடன் அறிவிக்க வேண்டும் என்பதற்காக இந்த பூஜையில் ஃபோன்கள் அனுமதிக்கப்படவில்லை. யாரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுத்து வெளியிட கூடாது எனவும் தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனவும் கண்டிசன்கள் போட்டுள்ளார்களாம்.

unknown node

Thalapathy 67 [Image Source: Twitter ]

எனவே படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு குட்டி டீசருடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூஜை முடிந்து புகைப்படங்கள் வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் தான். மேலும் மாஸ்டர்  படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் வெளியாகும் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.

இதையும் படியுங்களேன்-காப்பியடித்து மாட்டிக்கொண்ட தமன்.! வச்சி செய்யும் நெட்டிசன்கள்.. விழிபிதுங்கி நிற்கும் “வாரிசு” டீம்.!

unknown node

Thalapathy 67 [Image Source: Twitter ]

மேலும் நடிகர் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தமில்லாமல் நடந்து முடிந்த "தளபதி67" பூஜை.! ஏமாற்றத்தில் ரசிகர்கள்.!