கார்த்தி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “விருமன்”. இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்க, படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.
unknown nodeகிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரித்துள்ளது. இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த படத்தை ரசிகர்கள் அனைவரும் மேல தாளத்துடன் கொண்டாடி படத்தை பார்த்து விட்டு தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
unknown nodeஇதையும் படியுங்களேன்-எனக்கு அவுங்களோட இசையில நடிக்கணும்னு ஆசை.! மனம் திறந்த ஜிவி பிரகாஷ்.!
இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் திரையரங்குகளுக்கு சென்று படத்தை பார்த்து வருகிறார்கள். குறிப்பாக, “விருமன்” படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக நடித்துள்ளதால், அவரது குடும்பத்தினர் அனைவரும் இன்று திரையரங்கிற்கு வந்துள்ளனர்.
unknown nodeஅதைபோல, நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவும் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கிற்கு விரும் திரைப்படத்தை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.